Connect with us

ICC WC 2023: NZ v SL – 172 ரன்கள் இலக்கை நோக்கி நிதான ஆட்டத்தை வெளிப்பட்டதும் நியூஸிலாந்து அணி!

CWC23

ICC WC 2023: NZ v SL – 172 ரன்கள் இலக்கை நோக்கி நிதான ஆட்டத்தை வெளிப்பட்டதும் நியூஸிலாந்து அணி!

உலகக் கோப்பை தொடரின் 41வது போட்டி நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையே பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். நியூசிலாந்து அணியில் ஸ்பின்னரான இஷ் சோதிக்கு பதிலாக லாக்கி பெர்குசன் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணியிலும் கசுன் ரஜிதாவுக்கு பதிலாக சமிகா கருணரத்னே சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து முதலில் பேட் செய்த இலங்கை நியூசிலாந்து பவுலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 46.4 ஓவர்களில் 171 ரன்களில் ஆல்அவுட்டாகியுள்ளது. ஓபனிங் பேட்ஸ்மேனான குசாப் பெரேரா மட்டும் அதிரடியாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவர் 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவருக்கு அடுத்தபடியாக பவுலரான மகேஷ் தீக்‌ஷனா அடுத்த அதிகபட்ச ஸ்கோராக 38 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் உள்ளார். இலங்கை பேட்டர்களில் 6 பேர் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறியுள்ளனர்.

கடைசி விக்கெட்டுக்கு தீக்‌ஷனா – மதுஷங்கா ஆகியோர் இணைந்து 43 ரன்கள் சேர்த்தனர். முதல் 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்த இலங்கை பின்னர் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தால் இந்த ஸ்கோரை எட்டியுள்ளது. நியூசிலாந்து பவுலர்களில் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெர்குசன், ஸ்பின்னர்களான சாண்ட்னர், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் இலங்கை பேட்டிங்கில் சொதப்பியுள்ளது.

ரன் ரேட்டை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நியூசிலாந்து பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி குறைவான ஓவர்களில் என்ற இலக்கை சேஸ் செய்தால் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்து கொள்ளலாம். ஸ்பின்னர்களுக்கு கைகொடுக்கும் விதமாக ஆடுகளம் செயல்படுவதால், இலங்கை ஸ்பின்னர்கள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தருவார்களா என்பதை பார்க்க வேண்டும். 14 ஓவர்கள் முடிவில் 88 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் ஆடிவருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in CWC23

To Top