Connect with us

அமரன் படத்துக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் பாராட்டு – நெகிழ்ச்சியில் படக்குழு..!!

Cinema News

அமரன் படத்துக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் பாராட்டு – நெகிழ்ச்சியில் படக்குழு..!!

அமரன் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில் இப்படத்திற்கு இந்திய ராணுவ அதிகாரிகள் மனதார பாராட்டியுள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படமே அமரன் .

எஸ்.கே கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார் .இவர்களுடன் சேர்ந்து இப்படத்தில் ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

இப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வரும் 31 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தையும் படக்குழுவையும் இந்திய ராணுவ அதிகாரிகள் மனதார பாராட்டியுள்ளனர்.

அமரன் திரைப்படம் டெல்லியில் நேற்று ராணுவ அதிகாரிகளுக்குப் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. குடும்பத்துடன் படத்தைப் பார்த்த ராணுவ அதிகாரிகள் படத்தையும் படக்குழுவையும் மனம் நெகிழ்ந்து பாராட்டியுள்ளனர்.

மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று, தியாகத்திற்குச் செய்யப்பட்ட மரியாதைதான் இத்திரைப்படம் என ராணுவ அதிகாரிகள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top