Connect with us

கடும் கோபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு – என்ன மேட்டர் தெரியுமா..?

Cinema News

கடும் கோபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு – என்ன மேட்டர் தெரியுமா..?

கடுமையான கோபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவரது அன்பு மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கு சினிமாவில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் .

ஒரு பக்கம் பாட்டு மறுபக்கம் நடிப்பு என கலக்கி வரும் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சளார் திரைப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது .

இதையடுத்து நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது லோகேஷ் – ரஜினிகாந்த் காம்போவில் உருவாகும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடும் கோபத்தில் ஸ்ருதிஹாசன் போட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

நான் சாதாரணமாக ஒரு விஷயத்திற்கு குறை சொல்லும் நபர் கிடையாது. ஆனால் இண்டிகோ நிறுவனத்தினர் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டனர்.

கடந்த 4 மணி நேரமாக எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் பயணிகளுக்கு உதவ முன்வருவீர்களா? என்று பதிவிட்டுள்ளார்.

ஸ்ருதிஹாசனின் இந்த பதிவிற்கு பதிலளித்த இண்டிகோ நிறுவனம் கூறியதாவது : தாமதத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். மும்பையில் மோசமான வானிலை நிலவி வருவதால் விமான போக்குவரத்து தாமதமாகி உள்ளது.

இது எங்கள் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  59 வயதில் கின்னஸ் சாதனை படைத்த 12 பேரக்குழந்தைகள் கொண்ட பாட்டி..!!

More in Cinema News

To Top