Connect with us

வேலைக்கான கூலியை ஆதார் இணைப்பின் வழியே வழங்க சொன்னால் எப்படி – அமைச்சர் மனோ தங்கராஜ்

Featured

வேலைக்கான கூலியை ஆதார் இணைப்பின் வழியே வழங்க சொன்னால் எப்படி – அமைச்சர் மனோ தங்கராஜ்

நீங்கள் சோற்றில் கை வைக்க, சேற்றில் கால் வைக்கும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு MGNREGS திட்டத்தின் கீழ் வேலைக்கான கூலியை ஆதார் இணைப்பின் வழியே வழங்க கூறும் ஒன்றிய பாஜக அரசிற்கு கிராமப்புற ஏழையின் நிலை என்ன என்பது புரியாது.

இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில் :

ஒன்றிய பாஜக அரசாங்கம் தொடர்ந்து டிஜிட்டல் இந்தியா, பாரத் நெட் என்று நாடு முழுக்க இணையவழி தொடர்பு ஏற்படுத்திவிட்டதாக தற்பெருமை பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் 2022ம் வெளியிடப்பட்ட Oxfam நிறுவனத்தின் India Inequality Report 2022 என்ற அறிக்கை இந்திய கிராமப்புற மக்களில் 31 சதவிகிதம் தான் இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள் என்று கூறி பாஜகவின் போலி பிரச்சாரத்தை முறியடித்தது.

‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு (MGNREGS)’ திட்டத்தில் ஆதார் இணைப்பின் வழியே ஊதியம் வழங்க ஒன்றிய அரசு இந்தமாத ஆரம்பத்தில் ஆணை பிறப்பித்தது.

ஆதார் எண் இணைக்கப்படாத தொழிலாளர்கள் விடுபட்டுப் போவதற்கும், ஊதியம் பெறமுடியாமல் இருப்பதற்கும் வழிவகுக்கும் என்பதால், இதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிருந்து எதிர்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.

இதே போன்று சென்ற வருடம் இத்திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் கைபேசியின் மூலம் வருகையை பதிவு செய்வது கட்டாயமாக்க பட்டதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. இணைய சேவையும், Smart Phone வசதியும் இல்லாத பகுதிகளில் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாயினர்.

தனது பாரத் நெட் திட்டத்தின் கீழ் இணைப்புகள் கொடுப்பதாக 6 லட்சம் கிராமங்களில் 2 லட்சத்திற்கும் குறைவான கிராமங்களில் தான் இந்த 2015 முதல் 2023 வரை கெடுத்து முடித்தது.

இணைப்பு கொடுத்துவிட்டதாக கூறும் 1,90,000 பஞ்சாயத்துகளிலும் கூட சரியான முறையில், தங்கு தடையின்றி இணைப்பு வருவதில்லை என்ற புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

அப்படி இருக்க கிராமப்புற தொழிலாளர் எல்லாவற்றிற்கும் இணையத்தை கட்டாயமாக்குவது அவர்களை தெரிந்தே திட்டத்திலிருந்து வெளியேற்றுவதற்கு சமம். கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் உச்சத்தில் இருந்த போதே Co-Win தளத்தை அறிமுகப்படுத்தி, எப்படி இணையசேவை வசதி இல்லாத அடித்தட்டு மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில் சிரமத்தை ஏற்படுத்தியது பாஜக அரசு என்பதை பார்த்தோம்.

இப்படிதான் ஒவ்வொரு கட்டத்திலும் தொழில் நுட்பத்தை ஏழை எளிய மக்களை தள்ளி வைப்பதற்கே இந்த அரசாங்கம் பயன்படுத்துகிறது.

பாமர மக்களுக்கு இந்த போக்கை கையாலும் பாஜக, பெரு நிறுவனங்களுக்கு தகுந்தார் போல டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது. அதற்கு நேர்மாறாக மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் தொழில்நுட்பம் மாணவர்களுக்கு கல்வியை சிறந்த முறையில் கொண்டு சேர்க்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் பயன்படுத்தப் படுகிறது.

See also  வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பூர்வக்குடி மக்கள் - ஓபிஎஸ் கடும் கண்டனம்

‘அறிவியல் வளர்ச்சியை மக்களை ஒடுக்க பயன்படுத்துவது ஆரிய சனாதனம், அதே அறிவியல் வளர்ச்சியை மக்கள் நலனுக்காக, சேவைகளை ஜனநாயகப் படுத்த ஆக்கப்பூர்வமாக செயல்படுத்துவதே திராவிடம்’. ஏனெனில் அதுவே “வேதங்களின் முன் அறிவியல் அடிபணிய வேண்டும்” என்று கூறுவோருக்கும், பெரியாரின் “இனி வரும் உலகம்” என்ற அறிவியல் பார்வையை மனதில் ஏற்றிய எங்களுக்கமான வேறுபாடு என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top