Connect with us

“ODI WC 2023 Semi Final: IND v NZ – இந்திய கிரிக்கெட் அணியை வாழ்த்திய பிரபல ஜெர்மனி நாட்டின் கால்பந்தாட்ட வீரர்!”

CWC23

“ODI WC 2023 Semi Final: IND v NZ – இந்திய கிரிக்கெட் அணியை வாழ்த்திய பிரபல ஜெர்மனி நாட்டின் கால்பந்தாட்ட வீரர்!”

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி நாளை நியூஸிலாந்து அணியுடன் அரை இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்திய அணிக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார் ஜெர்மனி நாட்டின் கால்பந்தாட்ட வீரர் தாமஸ் முல்லர்.

இந்த தொடரின் முதல் சுற்றில் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை இந்திய வீரர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்திய அணி வீரர்கள் நாக்-அவுட் சுற்றிலும் சிறப்பாக செயல்பட்டால் மூன்றாவது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பிரபல கால்பந்தாட்ட வீரர் தாமஸ் முல்லருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது.

அதனை அணிந்து கொண்ட அவர் இந்திய அணிக்கு தந்து வாழ்த்தினை தெரிவித்தார். “ஜெர்சி வழங்கிய இந்திய அணிக்கு நன்றி. குட் லக்” என அவர் தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “அப்பாவின் வாழ்க்கை திரையில்… சூரியின் உணர்ச்சிப் படம்”

More in CWC23

To Top