Connect with us

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்களின் பட்டியல் வெளியானது..!!

CWC23

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்களின் பட்டியல் வெளியானது..!!

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது .

அதன்படி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரராக 152.69 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் முதலிடம் பிடித்துள்ளார்.

121.49 புள்ளிகளுடன் இந்திய வீரர் ரோகித் சர்மா 2வது இடத்திலும், 114.45 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா வீரர் எய்டன் மார்க்ரம் 3வது இடத்திலும் உள்ளனர்.

இதேபோல் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது . அதன்படி 24 சிக்ஸர்களுடன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதல் இடம் பிடித்துள்ளார் .

22 சிக்ஸர்களுடன் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் 2வது இடத்திலும் , 21 சிக்ஸர்களுடன் தென்னாபிரிக்க அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான குயிண்டன் டி காக் 3 வது இடத்திலும் , 20 சிக்ஸர்களுடன் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்சல் மார்ஷ் 4 வது இடத்திலும் உள்ளனர்.

உலகக்கோப்பையில் நடைபெற்று முடிந்த லீக் சுற்றில் இந்தியா , நியூசிலாந்து , ஆஸ்திரேலியா , தென்னாபிரிக்க ஆகிய 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றும் பாக்கிஸ்தான் , நெதர்லாந்து , பங்களாதேஷ் , இலங்கை , இங்கிலாந்து ,ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் முடிந்த வரை போராடி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

இந்நிலையில் நாளை தொடங்கும் அரையிறுதி போட்டியில் எந்த அணி வென்று இறுதி போட்டிக்கு முன்னேற போகிறது எந்த அணி தொடரில் இருந்து வெளியேற போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in CWC23

Advertisement
 

Trending

 
Advertisement
To Top