Connect with us

“உங்களை போல் ஒருவரை நான் பார்த்ததே இல்ல” ரோஹித் ஷர்மாவை புகழ்ந்த பாக் முன்னாள் வீரர்..!!

CWC23

“உங்களை போல் ஒருவரை நான் பார்த்ததே இல்ல” ரோஹித் ஷர்மாவை புகழ்ந்த பாக் முன்னாள் வீரர்..!!

உலக கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவை போன்ற ஒரு வீரரை யாராலும் பார்க்க முடியாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியதாவது:

நாம் அனைவரும் விராட், ரூட், வில்லியம்சன், பாபர் அசாம் உள்ளிட்ட வீரர்கள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால், தற்போது அதீத பலம் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முற்றிலும் மாறுபட்ட வீரர். எந்த ஒரு சூழ்நிலைகளிலும், எந்த ஒரு பந்து வீச்சிலும் மிக எளிதாக ரன்களை குவித்து பேட்டிங்கில் அசத்துகிறார்.

உலக கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவை போன்ற ஒரு வீரரை யாராலும் பார்க்க முடியாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமாக விளையாடி வரும் இந்திய அணி இதுவரை விளையாடிய அணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பெற்று முதல் அணியாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

உலகக்கோப்பையில் இதுவரை முடிந்த போட்டிகளில் இந்தியா , நியூசிலாந்து , ஆஸ்திரேலியா , தென்னாபிரிக்க ஆகிய 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றும் பாக்கிஸ்தான் , நெதர்லாந்து , பங்களாதேஷ் , இலங்கை , இங்கிலாந்து ,ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் முடிந்த வரை போராடி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

இந்நிலையில் நாளை மறுநாள் தொடங்கும் அரையிறுதி போட்டியில் எந்த அணி வென்று இறுதி போட்டிக்கு முன்னேற போகிறது எந்த அணி தொடரில் இருந்து வெளியேற போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரீ-ரிலீஸ் ஆகும் கிறிஸ்டோஃபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லர்’ திரைப்படம்..!!

More in CWC23

To Top