Connect with us

“ஷமியின் ஆட்டத்தை பற்றி பேசிய மும்பை – டெல்லி காவல்துறையினர்.. வைரலாகும் Tweets”

CWC23

“ஷமியின் ஆட்டத்தை பற்றி பேசிய மும்பை – டெல்லி காவல்துறையினர்.. வைரலாகும் Tweets”

நடந்து வரும் உலகக் கோப்பை தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி உள்ளது இந்திய அணி….நேற்று முதல் இந்த ஆட்டத்தை பற்றி தான் பேச்சுகள் இருக்கின்றது என்றும் சொல்லலாம்..

இந்தப் போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார் ஷமி..அவரை அனைவருமே கொண்டாடி வருகின்றனர்…அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது இந்தப் போட்டியில் பல சாதனைகளையும் படைத்தார் ஷமி அவரை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர் என்றும் சொல்லலாம்…

கொண்டாட்டத்தின் இன்னொரு பக்கமாக டெல்லி மற்றும் மும்பை காவல் துறையின் ட்விட்டர் பதிவுகள் கவனம் ஈர்த்து வருகின்றது…முதலில் டெல்லி காவல் துறை தங்களது பக்கத்தில் இன்றிரவு நடந்த தாக்குதலுக்கு ஷமி மீது நீங்கள் வழக்குப் பதிவு செய்ய மாட்டீர்கள் என நம்புகிறோம் என மும்பை காவல் துறையை Tag செய்து பதிவிட்டது அவை வைரல் ஆகி இருந்தது.

இப்பதிவுக்கு பதிலளித்த மும்பை காவல் துறை எக்கச்சக்கமாக இதயங்களைத் திருடியதற்கான அழுத்தமான குற்றச்சாட்டுகளை சொல்ல டெல்லி காவல் துறை தவறவிட்டுவிட்டது…இதில் மேலும் சில குற்றவாளிகள் உள்ளனர் என்றும் அன்புள்ள குடிமக்களே இரு மாநில காவல் துறையும் IPC பற்றி தெரிந்து இருக்கின்றோம்..இது சர்ச்சை ஆக்காமல் இருக்கவும் வேண்டும்,நகைச்சுவைக்காகவே இப்படி எனவும் சொல்லி இருக்கின்றனர்…

இந்த ட்விட்டர் பதிவுகளை கிரிக்கெட் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்..அடடா இப்படி ஒரு அழகான விமர்சனங்களா என அனைவரும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in CWC23

To Top