Connect with us

பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் பயணிப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – சென்னை போக்குவரத்துக் கழகம் விளக்கம்

Featured

பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் பயணிப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – சென்னை போக்குவரத்துக் கழகம் விளக்கம்

பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கம் கொடுத்துள்ளது.

இளம் கன்று பயம்மறியாது என்ற பலமிக்கேற்ப இந்த கால இளசுகள் பேருந்துகளின் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்வதை கெத்தாக நினைத்து கை கால்களை இழந்து இன்று வீட்டோடு முடங்கி கிடக்கின்றனர் .

இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழ்நாடு அரசு எத்தனையோ கட்டுப்பாடுகளை போட்டாலும் இந்த இளம் தலைமுறைகள் எதுவும் சொல் பேச்சு கேட்பது போல் தெரியவில்லை.

இந்நிலையில் பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கம் கொடுத்துள்ளது.

  • மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களை பாதுகாப்பாக உட்புறம் வருமாறும், படிக்கட்டு பயணத்தை அறவே தவிர்க்குமாறும் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் நடத்துநர், ஓட்டுநரால் அறிவுறுத்தப்படுகிறது.

  • மேற்பார்வையாளர்கள், வருவாய்ப்பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டோரும் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

  • பள்ளிகளுக்கு நேரில் சென்று படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் ஆபத்து, உயிரிழப்பு போன்ற கடுமையான விளைவுகளை எடுத்துரைத்து, ஆபத்தான பயணத்தை தவிர்த்து பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டும் என மாணவர்களிடம் மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

  • இது தொடர்பாக அவ்வப்போது ஆசிரியர்களும் அறிவுறுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

  • ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்களைக் கண்டறிந்து, பெற்றோர் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட கல்வி நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்படுகிறது.

  • காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதோடு, பள்ளி, கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் கோரும் மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரன் குவிப்பில் மீண்டும் சாதனை படைக்குமா SRH..? ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று RCB - SRH அணிகள் மோதல்..!!!

More in Featured

To Top