Connect with us

ஆஸ்திரேலியா அணியை திணற வைத்த ஆப்கானிஸ்தான்..என்ன நடக்குது!

CWC23

ஆஸ்திரேலியா அணியை திணற வைத்த ஆப்கானிஸ்தான்..என்ன நடக்குது!

வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஸத்ரன் சதம் அடித்து அசத்தியுள்ளார்…அவர் சிறந்த ஆட்டத்தை கொடுத்து ஆஸ்திரேலியா அணியை ஷாக்கில் ஆழ்த்தியது…

இதன்மூலம் உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார்…அவருக்கு நிறைய நல்ல நல்ல கமெண்ட்ஸ் வந்து கொண்டு இருக்கின்றது…இப்ராகிம் சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் விளாசி இருந்தது ஆப்கானிஸ்தான் அணி.

இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது ஆப்கானிஸ்தான் அதன்படி மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரஹ்மத் ஷா 30 ரன்கள், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி 26 ரன்கள், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 22 ரன்கள், மொகமது நபி 12 ரன்கள் எடுத்து விக்கெட்களை இழந்தனர் அப்படி ஒரு நிலை இருந்தாலும் இப்ராகிம் பொறுப்புடன் விளையாடினார்…அதுவே சிறப்பாக அமைந்தது…

அதனை தொடர்ந்து விளையாட வந்த ஆஸ்திரேலியா அணி 8 ஓவரில் 45 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டை இழந்து சரிவில் இருக்கின்றது என்று தான் சொல்லவேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in CWC23

To Top