Connect with us

கார்த்தியின் வா வாத்தியார்: தடைகளை தாண்டி டிசம்பர் 24-ல் வருமா?

Cinema News

கார்த்தியின் வா வாத்தியார்: தடைகளை தாண்டி டிசம்பர் 24-ல் வருமா?

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, க்ரித்தி ஷெட்டி நடித்துள்ள வா வாத்தியார் படம் அனைத்து பணிகளும் முடிந்து நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவைச் சுற்றிய கடன் பிரச்னை காரணமாக நீதிமன்றத் தடையை சந்தித்த இப்படம், ஒருவழியாக டிசம்பர் 12-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ப்ரோமோஷன், ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் என படக்குழு உற்சாகமாக செயல்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மீண்டும் ரிலீஸ் தள்ளிப்போனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. நலன் குமாரசாமியின் தனித்துவமான இயக்கமும், கார்த்தியின் கம்பேக் எதிர்பார்ப்பும் இப்படத்தின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் வா வாத்தியார் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எம்ஜிஆரின் நினைவு நாளான டிசம்பர் 24-ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் கார்த்தி எம்ஜிஆரின் தீவிர ரசிகராக நடித்திருப்பதால், அந்த நாளைத் தேர்வு செய்திருப்பது பொருத்தமாக இருக்கும் என படக்குழு கருதுகிறது. பல தடைகளை கடந்து வந்த இந்த படம், இந்த முறையாவது திட்டமிட்டபடி திரையரங்குகளை எட்டுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top