Connect with us

“தீபாவளி அன்று வெளியாகும் ரஜினியின் லால் சலாம் படத்தின் Teaser!”

Cinema News

“தீபாவளி அன்று வெளியாகும் ரஜினியின் லால் சலாம் படத்தின் Teaser!”

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த டீசர் வீடியோ ரஜினி ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’லால் சலாம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இந்த டீசர் ரன்னிங் டைம் 1 நிமிடம் 34 வினாடிகள் என்றும் கூறப்படுகிறது. டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா மக்கள் - முதல் ஆளாக நிதி உதவி வழங்கிய நடிகர் ஜூனியர் என்டிஆர்..!!

More in Cinema News

To Top