Connect with us

வதந்திகளை பரப்ப வேண்டாம் – வெளியானது நடிகர் அஜித்தின் ஹெல்த் அப்டேட்

Cinema News

வதந்திகளை பரப்ப வேண்டாம் – வெளியானது நடிகர் அஜித்தின் ஹெல்த் அப்டேட்

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது உடல் நலம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

மகிழ்ந்திருமேனி இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துடன் சேர்ந்து திரிஷா அர்ஜுன் ஆரவ் உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படம் முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் எடுக்கப்படுத்து வரும் நிலையில் படக்குழு சிறிய இடைவெளி எடுத்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது .

இதனால் அஜித்துக்கு என்ன ஆனது எதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் என ரசிகர்கள் ஒருபக்கம் புலம்ப மறுபக்கம் அவர்க்கு எதோ பெரிய பிரச்னை இருப்பதாக பல வகையான தகவல் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் அஜித்தின் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறுகையில் :

சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று (மார்ச் 7) வழக்கமான உடல் பரிசோதனைக்குச் சென்றார். அதில் அவரின் காதுக்கு கீழ் பகுதியில் உள்ள நரம்பில் வீக்கம் இருப்பதாகவும், மைனர் ஆப்ரேஷன் மூலம் இதனை சரி செய்துவிடலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று இருப்பதாககவும் தற்போது அஜித் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் அவரது உதவியாளர் சுரேஷ் சந்திரா தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மீண்டும் காவல் அதிகாரியாக மிரட்டும் ரஜினி - வெளியானது வேட்டையன் படத்தின் ட்ரைலர்..!!

More in Cinema News

To Top