Connect with us

“அரசியலை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது..! தளபதி விஜய்க்கு நடிகர் கமல்ஹாசன் கொடுத்த Advice!”

Cinema News

“அரசியலை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது..! தளபதி விஜய்க்கு நடிகர் கமல்ஹாசன் கொடுத்த Advice!”

விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் LCU-ன் கீழ் உருவான இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேபோல், பாக்ஸ் ஆபிஸில் 550 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இதனையடுத்து கடந்த வாரம் லியோ வெற்றி விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய், தனது அரசியல் பயணம் குறித்து பொடி வைத்து பேசியிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் 234 தொகுதிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நிதியுதவி செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் விஜய் மக்கள் இயக்கம், தீவிரமாக களப்பணியாற்றத் தொடங்கியுள்ளது. அதேபோல் “2026ல் கப்பு முக்கியம் பிகிலு” என லியோ சக்சஸ் மீட்டில் விஜய் பேசியதும் கவனம் ஈர்த்தது.

சினிமாவில் கவனம் செலுத்தும் அதே அளவு, அரசியல் கனவுகளோடும் காய்களை நகர்த்தி வருகிறார் விஜய். இதனையடுத்து இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் விஜய்யின் அரசியல் ஆசை குறித்து கருத்துத் தெரிவித்திருந்தனர். அவர்களின் வரிசையில் கமல்ஹாசனும் தற்போது விஜய்க்கு அட்வைஸ் செய்துள்ளார். அதாவது, விஜய் அரசியலை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது என கூறியுள்ளார்.

மேலும், அரசியலில் வருவதற்கான தகுதியையும் உத்வேகத்தையும் விஜய் வளர்த்துக்கொள்ள வேண்டும். மற்றபடி அவரை அரசியலுக்கு வரும்படி அழைப்புவிடுத்து பல நாட்கள் ஆகிவிட்டதாக கமல் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய கமல், விஜய், விஷால், சூர்யா, சிம்பு என யாராக இருந்தாலும், அவர்களது சித்தாந்தம் ஒத்துப்போனால், அரசியலில் கூட்டணி வைத்துக்கொள்வேன் எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் அரசியல் குறித்து கமல்ஹாசன் அட்வைஸ் செய்துள்ளது ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வருகிறது. விக்ரம் – லியோ படங்கள் மூலம் LCU-ல் இணைந்த கமல், விஜய் கூட்டணி, அரசியலிலும் கூட்டணி வைக்குமா என எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதனிடையே விஜய்யும் ரஜினி மாதிரி அரசியலுக்கு வருவதாக சொல்லி தனது ரசிகர்களை ஏமாற்றி வருவதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பூர்வக்குடி மக்கள் - ஓபிஎஸ் கடும் கண்டனம்

More in Cinema News

To Top