Connect with us

கீழக்கரை ஜல்லிக்கட்டு முதல் பரிசை தட்டிச்சென்ற அபிசித்தர்..!!

Featured

கீழக்கரை ஜல்லிக்கட்டு முதல் பரிசை தட்டிச்சென்ற அபிசித்தர்..!!

மதுரை கீழக்கரையில் கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பிரபல மாடுபிடி வீரர் அபிசித்தர் முதல் பரிசை தட்டிச்சென்றுள்ளார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 62.78 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து காலை 11.10 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்றது .

முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. பின்னர் ஆன்லைன் டோக்கன் எண் வரிசையின் அடிப்படையிலயே வாடிவாசலில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன .

போட்டி தொடங்குவதற்கு. முன்பாகவே காளைகளுக்கும், வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஜல்லிக்கட்டு களத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இப்போட்டியில் சிறந்த காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் தமிழக அரசு சார்பில் தலா 1 மகேந்திரா தார் ஜீப் காரும், 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது .

2வது பரிசு பெறும் காளைக்கும், வீரருக்கும் தலா ஒரு பைக் 50ஆயிரம் ரொக்க பணம் பரிசாக வழங்கப்படுகிறது.

இதையடுத்து 500 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் களம் காண இப்போட்டி விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்றது .

கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் 10 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர் முதலிடம்

முதலிடம் பிடிக்கும் காளை உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரருக்கு `தார் SUV’ உடன் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது .

இதையடுத்து கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் 10 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர் முதலிடம் பிடித்துள்ளார் . இதையடுத்து அவருக்கு பரிசாக `தார் SUV’ காருடன் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது

போட்டியின்போது சிறப்பாக விளையாடும் மாடு பிடிவீரர்களுக்கும், காளையின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் முதல் அண்டா சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, கட்டில், உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உலககின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று குஜராத்தை வீழ்த்துமா பெங்களூரு..? டாஸ் வென்ற RCB பந்துவீச முடிவு ..!!

More in Featured

To Top