Connect with us

“2வது Test போட்டியில் மோதும் இந்தியா v தென் ஆப்பிரிக்கா அணிகள்! வெற்றி யாருக்கு?!”

Sports

“2வது Test போட்டியில் மோதும் இந்தியா v தென் ஆப்பிரிக்கா அணிகள்! வெற்றி யாருக்கு?!”

முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து மீண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டுமானால் பேட்டிங், பந்து வீச்சு என அனைத்து துறையிலும் இந்திய அணி உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற தவறினாலும் அல்லது ஆட்டத்தை டிரா செய்தாலும் தொடரை இழந்துவிடும். மேலும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலிலும் இந்திய அணி பெரியஅளவில் பின்னடைவை சந்திக்கும்.

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவீந்திர ஜடேஜாகாயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் அவர் களமிறங்கக்கூடும். இதனால் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது இடத்தை இழக்கக்கூடும். அதேவேளையில் பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்குருக்கு பதிலாக அவேஷ் கான், முகேஷ் குமார் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

தெம்பா பவுமா காயம் காரணமாக விலகி உள்ளதால் தென் ஆப்பிரிக்க அணியானது டீன் எல்கர் தலைமையில் களமிறங்குகிறது. 36 வயதான டீன் எல்கர் முதல்டெஸ்ட் போட்டியில் 185 ரன்களைவேட்டையாடியதுடன் பொறுப்புகேப்டனாக சிறப்பாக வழிநடத்திஅணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார். கேப்டவுன் டெஸ்ட் போட்டியுடன் டீன் எல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இதனால் அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும்.

எய்டன் மார்க்ரம், டோனி டி ஜோர்ஸி, கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்ஹாம், மார்கோ யான்சன் ஆகியோரும் பேட்டிங்கில் வலு சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர். வேகப்பந்து வீச்சில் காகிசோ ரபாடா, நந்த்ரே பர்கர், மார்கோ யான்சன் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மீண்டும் ஒரு முறை நெருக்கடி கொடுக்க ஆயத்தமாக உள்ளனர். காயம் காரணமாக விலகி உள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்டு கோட்ஸிக்கு பதிலாக லுங்கி நிகிடி அல்லது கேசவ் மகாராஜ் களமிறங்கக்கூடும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  2 ரன்னில் சதத்தை தவறவிட்ட ருதுராஜ் - ஹைதராபாத் அணிக்கு 213 ரன்கள் இலக்கு..!!

More in Sports

To Top