Connect with us

குஜராத்தை அடித்து துவைத்த ரிஷப் பண்ட் – டெல்லி அணி 224 ரன்கள் குவிப்பு..!!!

Featured

குஜராத்தை அடித்து துவைத்த ரிஷப் பண்ட் – டெல்லி அணி 224 ரன்கள் குவிப்பு..!!!

அனல் பறக்க நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி குஜராத் அணிக்கு 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் டெல்லியில் உள்ள உலக புகழ் பெற்ற அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் DC – GT அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் கில் முதலில் பந்துவீச முடிவு செய்தார் .இதையடுத்து குஜராத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரிதிவி ஷா மற்றும் பிரஷர் களமிறங்கினர். அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இதையடுத்து ஷாய் ஹோப் வந்த வேகத்தில் வெளியேற அக்சர் படேலுடன் கேப்டன் ரிஷப் பண்ட் கைகோர்த்தார். இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் பந்துகளை சிதறடித்தனர்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர் . இதில் 43 பந்துகளில் 66 ரன்களை எடுத்த அக்சர் கேட்ச் கொடுத்து வெளியேற ரிஷப் தனது அதிரடியை இறுதி வரை தொடர்ந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 224 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது குஜராத் அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top