Connect with us

மிகவும் பிரம்மாண்டமாக தயாராகும் நரேந்திர மோடி மைதானம்…உலகக்கோப்பை இறுதி போட்டிக்காக தயாரான மைதானம்!Worldcup2023

CWC23

மிகவும் பிரம்மாண்டமாக தயாராகும் நரேந்திர மோடி மைதானம்…உலகக்கோப்பை இறுதி போட்டிக்காக தயாரான மைதானம்!Worldcup2023

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைகிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது…ஒரு மாதத்திற்கு மேலாக நடந்த இந்த ஆட்டம் விறுவிறுப்போப்பாக சென்று வந்தது…

10 அணிகள் கலந்துகொண்ட இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த அக்டோபர் 5-ம் தேதி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது…லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது…அவை சிறப்பாக விளையாடி அணைத்து அணிகளும் |Tough கொடுத்தது…

இதில் இந்தியா நியூஸிலாந்து அணியையும் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன…இனிமேல் தான் ஆட்டமே ஆரம்பம் என விறுவிறுப்பான அணிகள் ஒன்று சேர்ந்து இருக்கின்றது…

சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் நாளை நவம்பர் 19ஆம் தேதி மோதுகின்றன…

இந்த ஆட்டம் நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது…கடைசியாக இரு அணிகளும் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் விளையாடி இருந்தன..அப்போது இந்திய அணி தோற்று விட்டது…

இந்நிலையில்இறுதிப் போட்டி தொடக்க விழாவை பிரம்மாண்டமான முறையில் 4 கட்டங்களாக நடத்த திட்டம் போட்டு இருக்கின்றனர்,மிகவும் பிரம்மாண்ட முயற்சியாக இருக்கும் என தெரிகின்றது…

இறுதிப் போட்டியின் முதல் நாளில் பகல் 12 மணிக்கு இந்திய விமானப்படையின் முயற்சியில் 9 விமானங்கள் சுமார் 10 நிமிடங்கள் மைதானத்துக்கு மேலே உள்ள பகுதியில் சாகசம் புரிய உள்ளது.உலகக் கோப்பைவரலாற்றில் முதன்முறையாக விமானப்படையின் சாகசம் நடைபெற உள்ளது…இது பெரிய பிரம்மாண்ட முயற்சி ஆகும்…

முதல் இன்னிங்ஸ் முடிவடைந்ததும் முன்னாள் சாம்பியன்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது…இதில் உலகக் கோப்பையை வென்ற அணிகளின் கேப்டன்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்..அதில் பாடல்கள் நடனம் என நிறைய நிகழ்ச்சி நடக்க இருக்கின்றது…

2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கின் போது 2-வது இடைவேளையின் போது 90 விநாடிகளுக்கு கண்கவரும் வகையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற லேசர் ஷோ நடத்தப்பட உள்ளது.1200 Drone மூலமாக அதனை செய்ய உள்ளனர் அதனால் இந்த உலகக்கோப்பை ஆகச்சிறந்த சரித்திரமாக இருக்க போகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Content is King! 2025-ல் அதிக லாபம் பெற்றவை டெப்யூட் படங்கள்தான்!

More in CWC23

To Top