Connect with us

“அடுத்தடுத்து வரவிருக்கும் நடிகர் கமல்ஹாசனின் 6 படங்கள்.. ஒரு லிஸ்ட்!”

Cinema News

“அடுத்தடுத்து வரவிருக்கும் நடிகர் கமல்ஹாசனின் 6 படங்கள்.. ஒரு லிஸ்ட்!”

இந்தியன் 2

இந்தியன் 2 இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் திரைப்படம். இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் நகைச்சுவை நடிகர் விவேக் இணைந்து நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் கமல் மற்றும் விவேக் இருவரும் முதன் முதலில் இணைந்து நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்தினை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தியன் 3

இந்தியன் 3 – 1996 ஆம் ஆண்டு உலகநாயன் கமல் ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன், இந்தியன் 2 (2024) படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் திரைப்படம், இந்தியன் 3. இப்படத்தில் தமிழ் சினிமா நடிகர் / நடிகைகளின் பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் 2024 இரண்டாம் பாதியில் திரைக்கு வரலாம்.

கல்கி 2898AD


கல்கி – தெலுங்கு மற்றும் பான் இந்திய படமாக நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிகர் கமல் ஹாசன் நடித்துள்ளார். இப்படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் 120 கோடிகளுக்கு மேல் சம்பளமாக பெற்றுள்ளார். மிக பெரிய பொருட்செலவில் இப்படம் உருவாகி 2024 ஆம் ஆண்டு வெளியாகவிருக்கிறது.

தக் லைஃப்


தக் லைஃப் – இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தினை தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களான உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம், கமல் ஹாசனின் ‘ராஜ் கமல் பிலிம்ஸ்’ நிறுவனம் மற்றும் மணிரத்னமின் ‘மெட்ராஸ் டாக்கிஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுப்பு 2022 நவம்பர் 06ல் இணையத்தில் படக்குழு சார்பில் வெளியானது.

கமல்ஹாசன் 233

750x450_746082-kh233

(KH 233 – கமல்ஹாசன் 233) இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தின் நாயகன் கமல்ஹாசன் தானே இப்படத்தினை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவுப்பு 2023 ஜூலை 04ல் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டது.

விக்ரம் 2


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – கமல் ஹாசன் கூட்டணியில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக பார்ட் 2 படமாக உருவாகவிருக்கும் திரைப்படம். விக்ரம் 2 திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-ன் LCU படவரிசையில் இறுதி படமாக உருவாகவுள்ளது. இப்படம் பற்றிய அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

See also  பாலியல் சீண்டல்களுக்கு ஆதாரம் தர முடியாது - நடிகை பிரியாமணி ஓபன் டாக்..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top