Connect with us

நிதி பகிர்வில் வஞ்சிக்கப்படும் தமிழகம் – செல்வப்பெருந்தகை காட்டம்

Featured

நிதி பகிர்வில் வஞ்சிக்கப்படும் தமிழகம் – செல்வப்பெருந்தகை காட்டம்

கடந்த 10 ஆண்டுகாலமாக நிதி பகிர்வில் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அதிகாரக் குவியல் படிப்படியாக நடந்து வருகின்றது.

ஒற்றை ஆட்சி என்ற குறிக்கோளுடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வில் அப்பட்டமான பாரபட்சம் காட்டப்பட்டு தென் மாநிலங்கள் கடுமையாக வஞ்சிக்கப்பட்டு வருகின்றன.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த தகவலின்படி ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கிய மொத்த நிதி ரூபாய் 1 லட்சத்து 42 ஆயிரம் கோடி.

இதில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 25,495 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாடு உட்பட ஆந்திரா, கேரளா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 25 கோடி.

ஆனால், ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூபாய் 21,755 கோடி. ஒன்றிய நிதி தொகுப்புக்கு தமிழ்நாடு வழங்குகிற 1 ரூபாயில் திரும்பப் பெறுவது 29 பைசா தான். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலம் பெறுவதோ ரூபாய் 2.73. கடந்த 10 ஆண்டுகாலமாக நிதி பகிர்வில் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றன என செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படத்தில் நடிகர் சிம்பு - இணையத்தை கலக்கும் டக்கர் புகைப்படம்..!!

More in Featured

To Top