Connect with us

‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Featured

‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

‘மிக்ஜாம்’ புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் குழந்தைகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாமை சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

முகாமை தொடங்கி வைத்து பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது :

சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அங்கன்வாடி மையங்கள் , ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்களில் டிச.13ம் தேதி முதல் டிச.30 ஆம் தேதி வரை நடைபெறும்.

புயல் பாதிக்கபட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 9 மாதம் தொடங்கி 15 வயது வரையான குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது.

நடமாடும் மருத்துவ வாகனங்கள் நான்கு மாவட்டங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது;
160 வாகனங்கள் சென்னையில் இயங்கி வருகிறது.

6,421 முகாம்கள் மூலம் 4 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் . இதுவரை ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்டுள்ள 7 வார முகாம்களில் 7 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் . இன்னும் 3 வாரங்களுக்கு இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'வேட்டையன்' படத்தில் தனது பகுதியை நிறைவு செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!!

More in Featured

To Top