Connect with us

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 32 சதங்கள்.. புதிய வரலாறு படைத்த கேன் வில்லியம்சன்

Kane_Williamson

Sports

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 32 சதங்கள்.. புதிய வரலாறு படைத்த கேன் வில்லியம்சன்

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர் கேன் வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஹாமில்டனில் நடந்த இந்த போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் அவர் 260 பந்துகளில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.

இதற்கிடையே இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 32வது சதத்தை பூர்த்தி செய்தார். இதுவரை 98 போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் 172 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் 32 சதங்களை எட்டிய வீரர் என்ற ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக, ஸ்டீவ் ஸ்மித் 174 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 32 சதங்கள் அடித்த டாப் 5 வீரர்கள்:

கேன் வில்லியம்சன் – 172 இன்னிங்ஸ்
ஸ்டீவ் ஸ்மித் – 174 இன்னிங்ஸ்
ரிக்கி பாண்டிங் – 176 இன்னிங்ஸ்
சச்சின் டெண்டுல்கர் – 179 இன்னிங்ஸ்
யூனிஸ் கான் – 183 இன்னிங்ஸ்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹைதராபாத்தில் இன்று அசத்தப்போவது யார்..? SRH - RR இன்று பலப்பரீட்சை..!!

More in Sports

To Top