Connect with us

அத்துமீறும் இலங்கை கடற்படையால் மரண பயத்தில் மீனவர்கள் – மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய தமிழக முதல்வர்..!!

Featured

அத்துமீறும் இலங்கை கடற்படையால் மரண பயத்தில் மீனவர்கள் – மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய தமிழக முதல்வர்..!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறிருப்பதாவது :

நாகப்பட்டினம்‌ மீன்பிடித்‌ துறைமுகத்திலிருந்து 13.01.2024 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச்‌ சென்ற 10 மீனவர்களையும்‌, அவர்களின்‌ விசைப்படகையும்‌ இலங்கைக்‌ கடற்படையினர்‌ 15.01.2024 அன்று சிறைபிடித்தனர்‌ .

மற்றொரு சம்பவத்தில்‌, ராமநாதபுரம்‌, பாம்பன்‌ பகுதியைச்‌ சேர்ந்த 18 மீனவர்களையும்‌ அவர்களது இரண்டு விசைப்படகுகளையும்‌ 16.01.2024 அன்று இலங்கை கடற்படையினர்‌ சிறைபிடித்துள்ளனர்‌.

கடந்த மூன்று நாட்களில்‌ இலங்கை கடற்படையினர்‌ தமிழ்நாடு மினவர்களை அடுத்தடுத்து சிறைபிடித்துள்ளனர்‌ . இத்தகைய கைது நடவடிக்கைகள்‌ மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள்‌ வாழ்வாதாரமாக நம்பியுள்ள மீனவ சமூதாயத்தினரிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது .

இலங்கை கடற்படையினரின்‌ சிறைபிடிப்பு நடவடிக்கைகளில்‌ எந்த தளர்வும்‌ இருப்பதாகத்‌ தெரியவில்லை இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை தடுத்திட இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டுமென்றும்‌ இலங்கை கட்டுப்பாட்டில்‌ உள்ள அனைத்து படகுகளையும்‌ விடுவிக்க தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்.

இலங்கை கடற்படையினரால்‌ கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும்‌ அவர்களது மீன்பிடிப்‌ படகுகளையும்‌ உடனடியாக விடுவிக்க இலங்கை அரசுடன்‌ இந்த விவகாரத்தை வலுவாக எடுத்துச்‌ செல்ல வேண்டும்‌ என மத்திய வெளியுறவுத்‌ துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்‌ முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹைதராபாத்தை வீழ்த்தி புள்ளிபட்டியலில் உயருமா லக்னோ..? இன்று பலப்பரீட்சை..!!

More in Featured

To Top