Connect with us

இங்கிலாந்து அணியையம் முடித்து காட்டிய ஆஸ்திரேலியா அணி…டேபிளில் கடைசியிலே தங்கிய England!

CWC23

இங்கிலாந்து அணியையம் முடித்து காட்டிய ஆஸ்திரேலியா அணி…டேபிளில் கடைசியிலே தங்கிய England!

ICC ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது…இது ஆஸ்திரேலியா அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுளள்து..

287 ரன்கள் இலக்கை அடித்த இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டத்தின் முதல் பந்தே ஸ்டார்க் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி இருந்தார்.

ஜோ ரூட்டும் 13 ரன்களில் ஸ்டார்க் ஓவரில் வீழ்ந்தார் என்றாலும் பென் ஸ்டோக்ஸ்,டேவிட் மலான் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர்…ஆட்டத்தை வேறு இடத்திற்கு எடுத்து செல்ல அது உதவியது…

இருவரும் பொறுப்பாக விளையாடி 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்த நிலையில் டேவிட் மலான் 50 ரன்களுக்கு அவுட் ஆனார் அது பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது…இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பிவரும் கேப்டன் ஜாஸ் பட்லர் வந்த உடனே 1 ரன் மட்டுமே எடுத்து ஜம்பாவின் சுழலில் அவுட்டாகினார்.

ஜம்பா ஓவரில் 64 ரன்கள் எடுத்திருந்த ஸ்டோக்ஸ் விக்கெட் போனது லியாம் லிவிங்ஸ்டோன் 2 ரன்களே எடுத்து பெவிலியன் திரும்பினார்.மொயீன் அலி தனது பங்குக்கு 42 ரன்கள் எடுத்து வெளியேற கிறிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஷீத் இணைந்து வெற்றியை நோக்கி போராடினார்…ஆனால் தொடர்ந்து விக்கெட் விழுந்து….253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது இங்கிலாந்து…

இதன் மூலமாக 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா டேபிளில் அதே மூணாவது இடத்தில safe-ஆக உட்கார்ந்து விட்டது.நல்ல வெற்றியாகவே இது இருக்கின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Actress to Wildlife Photographer! 🐅🎥 மாளவிகாவின் அசத்தல் திறமை!

More in CWC23

To Top