Connect with us

“மறைந்த பாடகர்களுக்கு AI மூலமாக உயிர் கொடுத்த AR ரஹ்மான்! Lal Salaam படத்தில் இப்படி ஒரு ஆச்சரியமா?!”

Cinema News

“மறைந்த பாடகர்களுக்கு AI மூலமாக உயிர் கொடுத்த AR ரஹ்மான்! Lal Salaam படத்தில் இப்படி ஒரு ஆச்சரியமா?!”

செயற்கை நுண்ணறிவு என்ற AI தொழில்நுட்பம் தற்போது பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் தேர்தல் பிரச்சாரத்தில் கூட மறைந்த தலைவர்களின் உருவங்கள் மற்றும் குரல்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் மறைந்த பாடகர்களின் குரலுக்கு உயிர் கொடுத்து ’லால் சலாம்’ திரைப்படத்தில் இசைப்புயல் AR ரகுமான் பாடல்களை கம்போஸ் செய்து இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பழம்பெரும் பாடகர்கள் தற்கால பாடல்களை பாடுவது போன்ற வீடியோக்கள் அவ்வப்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த முயற்சியை AR ரகுமான் லாரன்ஸ் ’லால் சலாம்’ படத்திற்கு முதல் முதலாக பயன்படுத்தி உள்ளார்.

கடந்த 1998 ஆம் ஆண்டு காலமான பாடகர் ஷாகுல் ஹமீத் மற்றும் 2022 ஆம் ஆண்டு காலமான பம்பா பாக்கியா ஆகிய இருவரது குரல்களை AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி ’திமிறி எழுடா’ என்ற பாடலை AR ரஹ்மான் உருவாக்கியுள்ளார்.

இந்த தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த பாடலை திரையில் பார்க்கும்போது வித்தியாசமான அனுபவம் ரசிகர்களுக்கு ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இதேபோன்று பல மறைந்த பழம்பெரும் பாடகர்களின் குரலை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் அதனை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கொண்டாட தயாரா : தலையின் பிறந்தநாளன்று ரீ-ரிலீஸ் ஆகிறது 'மங்காத்தா' திரைப்படம்..!!!

More in Cinema News

To Top