Connect with us

“வசூல் வேட்டையாடிய LEO படம், ஆனாலும் தொடரும் சம்பள பிரச்சனை..! புலம்பித்தள்ளும் உதவி இயக்குநர்கள்!”

Cinema News

“வசூல் வேட்டையாடிய LEO படம், ஆனாலும் தொடரும் சம்பள பிரச்சனை..! புலம்பித்தள்ளும் உதவி இயக்குநர்கள்!”

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவான LEO திரைப்படம் ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியானது. லலித் குமாரின் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட LEOவுக்கு முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்தது. அதன்படி LEO முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் 148 கோடி என படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், நெகட்டிவான விமர்சனங்கள், ட்ரோல்களால் அடுத்தடுத்த நாட்களில் LEOவின் வசூல் தடுமாறத் தொடங்கியது.

இதனால் ஆயிரம் கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட LEO, 600 கோடி வரை மட்டுமே கலெக்‌ஷன் செய்துள்ளதாகத் தெரிகிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் LEO படத்தால் தயாரிப்பாளருக்கு 100 கோடி ரூபாய் வரை லாபம் என்றே சொல்லப்படுகிறது. அதேநேரம் LEO Audio Launch கேன்சல் ஆனதால், சக்சஸ் மீட்டிங்கை பிரம்மாண்டமாக நடத்தியது படக்குழு. நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற LEO சக்சஸ் மீட்டில், விஜய்யின் குட்டி ஸ்டோரியும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. அதேபோல், லோகேஷ் கனகராஜ் தனது உதவி இயக்குநர்களை மேடைக்கு வரவைத்து அவர்களை பெருமைப்படுத்தினார்.

இதேபோல் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதும் லோகேஷ் நடந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் LEOவில் வேலைப் பார்த்த லோகேஷின் உதவி இயக்குநர்களுக்கு சம்பள பிரச்சினை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, LEO வெளியாவதற்கு முந்தைய மாதமான செப்டம்பரில், லோகேஷின் உதவி இயக்குநர்கள் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாக இருந்தனர். ஆனால், அந்த மாதத்திற்கான சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் இன்னும் வழங்கவில்லையாம்.

இதனால் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர்கள் புலம்பி வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே LEO படத்தில் இடம்பெற்ற ‘நா ரெடி’ பாடலில் நடனம் ஆடியவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என சர்ச்சையானது. 2000 குரூப் டான்ஸர்ஸுடன் பிரம்மாண்டமாக உருவான இந்தப் பாடலில், யூனியன் டான்ஸ்ஸர்களைத் தவிர மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என புகார் எழுந்தது. அதன்பின்னர் இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்த நிலையில், தற்போது உதவி இயக்குநர்கள் தங்களுக்கு சம்பள பாக்கி இருப்பதாக சொல்லி நொந்து நூடுல்ஸ் ஆகியுள்ளனர்.

More in Cinema News

To Top