Connect with us

ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல் படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டது நெட்பிளிக்ஸ்…!!

Cinema News

ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல் படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டது நெட்பிளிக்ஸ்…!!

ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பில் உருவாகி வரும் சொர்க்கவாசல் படத்தின் முதல் தோற்றத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரேடியோவில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த ஒருசில நபர்களில் ஒருவர் தான் சுட்டிக்குழந்தை ஆர்.ஜே.பாலாஜி ( RJ Balaji ) ஆரம்ப காலத்தில் துணை நடிகராக வலம் வந்த இவர் போறபோக்கில் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்து பின்னர் படம் இயக்குவதில் குபீர் என்று குதித்துவிட்டார்.

இதையடுத்து LKG படத்தின் மூலம் இயக்குனராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமான ஆர்.ஜே.பாலாஜி அடுத்தடுத்து 3 படங்களை இயக்கி அதில் நாயகனாக நடித்து இன்று தமிழ் சினிமாவின் தவரிக்க முடியாத ஒரு அங்கமாக உருவெடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் சொர்க்கவாசல் இந்த படத்தை இயக்குகிறார்.

தமிழ் தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படம் திரையரங்குகளில் கோலாகலமாக வௌியாக உள்ளது .

இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் தோற்றத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பகிர்ந்து இப்படத்தின் உரிமையையும் அந்நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆர்.ஜே.பாலாஜியின் படங்கள் அனைத்தும் நகைச்சுவையாகவும் கருத்தாகவும் இருக்கும் என மக்களால் நம்பப்பட்டு வரும் நிலையில் இப்படம் எந்த மாதிரி வரப்போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  லக்னோ பந்துகளை தெறிக்கவிட்ட ருதுராஜ் - துபே - CSK அணி 210 ரன்கள் குவிப்பு..!!!

More in Cinema News

To Top