Connect with us

“தலைவர் 171 படத்தில் ரஜினியும், மம்முட்டியும் மீண்டும் இணைந்து நடிக்கப்போறாங்களா?!”

Cinema News

“தலைவர் 171 படத்தில் ரஜினியும், மம்முட்டியும் மீண்டும் இணைந்து நடிக்கப்போறாங்களா?!”

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் இந்த படத்தில் மம்முட்டி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்து அவரிடம் பேசப்பட்ட போது அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்தன. இந்த நிலையில் இந்த செய்திக்கு நடிகர் மம்மூட்டி விளக்கம் அளித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தலைவர் 171’. தற்போது ரஜினி ’தலைவர் 170’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே ’தலைவர் 171’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் கசிந்த நிலையில் தற்போது ஒரு முக்கிய கேரக்டரில் மம்முட்டி நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் மம்முட்டி மறுத்து விட்டதாகவும் வதந்திகள் பரவின.

ஆனால் இந்த செய்தியை மறுத்த மம்முட்டி ’தலைவர் 171’ படக்குழுவினர் தன்னை அணுகவில்லை என்றும் ஒருவேளை எனக்கான கேரக்டர் இருப்பதாக தெரிந்தால், அவர்கள் என்னை அணுகினால் நான் நடிக்க தயார் என்றும் தெரிவித்தார். ’தலைவர் 171’ திரைப்படத்தில் ரஜினியுடன் மம்மூட்டி நடித்தால், அந்த படம் ’தளபதி 2’ ஆக மாறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்திய தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்றது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்..!!

More in Cinema News

To Top