Connect with us

ஆளுநருக்கு எதிராக கூடும் கூட்டத்திற்கு பாஜக வரப்போறதில்லை என தகவல்…DMK வைத்த செக்!

Politics

ஆளுநருக்கு எதிராக கூடும் கூட்டத்திற்கு பாஜக வரப்போறதில்லை என தகவல்…DMK வைத்த செக்!

தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது அவை அனைத்தையும் நாம் அறிந்து இருப்போம்…தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்து வருகின்றது இப்படி பிரச்சனைகள் மாறி மாறி நிகழ்ந்து வருகின்றது என்பது நம் அனைவருமே அறிந்து இருப்போம்…

இதனை அடுத்து ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது…அவை பெரிதளவில் பேசவும் பட்டிருந்தது..நாளை இதற்கான தீர்ப்பு கிடைக்கும் என தெரிகின்றது..

அந்த வழக்கில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம்தாழ்த்துவதாக கூறப்பட்டிருந்தது…10 சட்ட மசோதாக்களை தமிழக அரசுக்கே தமிழக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி வைத்துள்ளார் அதனால் அவர் செய்தது நியாயம் அற்றது என பிரச்சனைகள் எழுந்து வருகின்றது…

இந்த நிலையில் தமிழர் சட்டப்பேரவை கூட்டமானது நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்…அதனால் பலரும் என்னவெல்லாம் நடக்கும் என தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளனர்…

இந்த கூட்டத்தில் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10சட்ட மசோதாக்களுக்கு மீண்டும் ஒப்புதல் பெற்று ஆளுநருக்கு அனுப்பப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆளுநருக்கு எதிராக கூட்டப்படுகின்ற சட்டப் பேரவை கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என பாஜக சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக சபாநாயகருக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..ஏற்கனவே பாஜவுக்காக தான் ஆளுநர் வேலை செய்கிறார் என்ற ஒரு பேச்சுக்களும் இருந்து வருகின்றது அதனால் நிச்சயம் இது கூட்டணி என பலர் விமர்சனங்களை கொட்டி வருகின்றனர்..எவையெல்லாம் இனி நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாப்போம்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சேப்பாக்கத்தில் CSK அணிக்கு எதிராக டாஸ் வென்ற SRH பந்துவீச முடிவு - கடின இலக்கை கொடுக்குமா CSK..?

More in Politics

To Top