Connect with us

ஆளுநரை எதிர்த்து களத்தில் இறங்கிய ஸ்டாலின்..மசோதாக்களை நிறைவேற்றியே ஆகவேண்டும்!

Politics

ஆளுநரை எதிர்த்து களத்தில் இறங்கிய ஸ்டாலின்..மசோதாக்களை நிறைவேற்றியே ஆகவேண்டும்!

தமிழக ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது…அடிக்கடி கருத்துக்கள் மாற்றம் ஏற்பட்டு நிறைய சண்டைகள் வருகின்றது…

இந்தநிலையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி நீண்ட காலமாக ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருப்பதாக சொல்லப்படுகின்றது…இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது…அங்கு நிறைய பேசப்பட்டும் இருந்தது..

தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கில்லையென்றும் இதன் காரணமாக அரசு பணிகளை துரிதப்படுத்த முடியவில்லையெனவும் கூறப்பட்டது. இதனையடுத்து ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றமும் பல கருத்துகளை தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்ற 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிவைத்துள்ளார்.அதில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வதற்கான சட்ட மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன என்றும் அந்த வகையில்

1 – சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, 2 – தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா 3 – தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா 4 – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, 5 – தமிழ்நாடு அன்னை தெரசா பல்கலைக்கழகம் திருத்த மசோதா, 6 – தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா 7 – தமிழ் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா,8 – தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, 9 – பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா 10 – தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதன் காரணமாக – 10 சட்ட மசோதாக்களை அனுப்பியதாக தகவல் சொல்லப்பட்டு இருக்கின்றது..

இதனையடுத்து ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு சார்பாக சிறப்பு சட்டமன்ற கூட்டமானது கூட்டப்பட்டுள்ளது என்றும் அதன்படி நவம்பர் 18 ஆம் தேதி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தகவல் வந்து பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழக அரசின் அறிக்கையால் பாதிப்புக்குள்ளாகும் மலைவாழ் மக்கள் - தினகரன் வேதனை

More in Politics

To Top