Connect with us

‘LEO’ பட பாணியில் தோனிக்கு Intro வீடியோ வெளியிட்ட சி.எஸ்.கே அணி – வைரல் வீடியோ

Featured

‘LEO’ பட பாணியில் தோனிக்கு Intro வீடியோ வெளியிட்ட சி.எஸ்.கே அணி – வைரல் வீடியோ

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக பயிற்சியை மேற்கொள்ள எம்.எஸ்.தோனி நேற்று சென்னை வந்தடைந்துள்ள நிலையில் அவரை வரவேற்கும் விதமாக சி.எஸ்.கே அணி சிறப்பான தரமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது .

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியில் பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது.இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தங்களை ஆயுத்தபடுத்தி வருகின்றனர்.

இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட அணைத்து அணிகளும் பயிற்சினை மேற்கொண்டுள்ள நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பயிற்சியை மேற்கொள்ள சென்னை வந்தடைந்தது . ஆனால் எம்.எஸ்.தோனி மட்டும் சென்னைக்கு வராமல் இருந்தார்.

இந்நிலையில் அம்பணி குடும்பத்தின் திருமண விழாவை முடித்த கையோடு என்று சென்னை வந்தடைந்துள்ளார் நம்ப தல தோனி.

சென்னை வந்திறங்கிய தோனிக்கு வழக்கம் போல் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது சிறப்பான தரமான வீடியோ ஒன்றை சி.எஸ்.கே அணி வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடருக்காக ‘தல’ தோனி சென்னை வந்ததை தொடர்ந்து, ‘LEO’ பட பாணியில் BADASS Intro வீடியோவை சி.எஸ்.கே அணி. வெளியிட்டுள்ளது தற்போது அந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top