Connect with us

என்னை பற்றி பேச நீங்க யாரு..Not Ok .. கடுமையாக விமர்சித்த ரக்ஷிதா மஹாலக்ஷ்மி!

Bigg Boss Tamil Season 7

என்னை பற்றி பேச நீங்க யாரு..Not Ok .. கடுமையாக விமர்சித்த ரக்ஷிதா மஹாலக்ஷ்மி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை அதிக அளவில் போட்டியாளர்கள் களமிறங்கினர்…டாஸ்க்குகளை தாண்டி சண்டைகள் அதிகமாம் இருந்து வருகின்றது…பிக் மற்றும் ஸ்மால் என்று இரண்டு வீடுகளில் மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக களமிறங்கினர். இதில் பாவா செல்லதுரை அவரே முன்வந்து வெளியேறிய நிலையில் பலராலும் விரும்பபட்ட பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்…இதுவே ஷாக் தான் என்றும் சொல்லலாம்…

பிக் பாஸ் வீட்டில் பிரதீபால் பெண்களுக்கு பிரச்சனை இருப்பதாக கூறி சர்ச்சை எழுந்த நிலையில் ரெட் கார்டு அவருக்கு கொடுக்கப்பட்டது இதனை அடுத்து மாயா மற்றும் பூர்ணிமா மீது கடுப்பான ரசிகர்கள், அவர்கள் இருவரும் தான் பிரதீப்பை திட்டமிட்டு வெளியேற்றியதாக பேசி வருகின்றனர்…அதற்காக நிறைய விஷயங்களை அனுபவித்தும் இருகின்றனர் அவர்கள்..

இந்நிலையில் இப்பொது வைல்ட் கார்டு போட்டியாளராக தினேஷ் களமிறங்கியுள்ள நிலையில் அவரையும் மாயா மற்றும் பூர்ணிமா டார்கெட் செய்வதாக கூறப்படுகிறது…இருந்தாலும் மாஸ் காண்பிக்கிறார் அவர்..

அண்மையில் மாயா மற்றும் பூர்ணிமா பேசுவது போல வெளியான ஒரு காணொளியில் அவர்கள் தினேஷை டார்கெட் செய்வது போல பேசியுள்ளனர்.மேலும் அவருடைய முன்னாள் மனைவியும், நடிகையுமான ரக்ஷிதாவுடன் தினேஷ் பற்றி பேசவேண்டும் என்று அந்த காணொளியில் அவர்கள் பேசுவது போல அமைந்து இருக்கின்றது…

இந்நிலையில் தன்னை பற்றி அவர்கள் இருவரும் பேசவேண்டிய அவசியம் என்ன நான் ஏற்கனவே வாழ்க்கையில் பல துயரங்களை அனுபவித்து வருகின்றேன் என்று கூறி பேசியுள்ளார்,அதனால் கண்டிப்பாக இதனை பற்றி கமல் பேசுவார் என எதிர்பார்க்க படுகின்றது…என்ன ஆக போகிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 300 நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்த கார்த்தியின் ரசிகர்கள் முடிவு..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top