Connect with us

22 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்திற்குள் தாக்குதல் – கடும் கண்டனம் தெரிவித்த ஜவாஹிருல்லா..!!

Featured

22 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்திற்குள் தாக்குதல் – கடும் கண்டனம் தெரிவித்த ஜவாஹிருல்லா..!!

பல கோடி மக்கள் வாழும் நம் இந்திய திருநாட்டில் 22 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்திற்குள் மோடி தலைமையிலான ஆட்சியின் போது இன்று தாக்குதல் நடைபெற்றுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா கூறியதாவது :

பல கோடி மக்கள் அமைதியாக வாழ்ந்து வரும் வரும் நமது நாட்டின் புதிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் சாகர் சர்மா மற்றும் டி. மனோரஞ்சன் ஆகிய இருவர் பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்து வண்ண புகை மூட்டத்தை ஏற்படுத்தும் கைக்குண்டுகளை விசியிருப்பது கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு இதே நாளில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி ஒன்றியத்தில் இருந்த போது நாடாளுமன்ற வளாகத்திற்குள் பயங்கரவாத தாக்குதலுக்கு நடைபெற்றது. அது நடந்து சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்திற்குள் மக்களவையில் மோடி தலைமையிலான ஆட்சியின் போது இன்று இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்றத்தின் ஐந்து அடுக்கு பாதுகாப்பை மீறி இந்த இருவரும் மக்களவைக்குள் நுழைந்திருப்பது மக்களின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடம் மிகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் ஒன்றிய அரசின் சார்பாக விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் வாய் சவடால்கள் என்பதை இன்றைய இந்த பயங்கர சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.

இன்று நாடாளுமன்றத்திற்குள் புகைக்குண்டுகளை எடுத்துவந்த விசமிகளை எப்படி அனுமதித்தார்கள்..? அதுவே நச்சுப்புகைக் குண்டுகளாய் இருந்திருந்தால் நினைக்கவே மனம் பதறுகிறது. மக்களவையில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் குறித்து நேர்மையான விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டு கொள்கிறேன் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  OTTயில் வெளியாகும் பிருத்விராஜின் ஆடுஜீவிதம் - எப்போது தெரியுமா..?

More in Featured

To Top