Connect with us

“இதுக்கு மேல உங்க கூட பேசுறதே வேஸ்ட்” பூர்ணிமா – மாயா உறவில் விழுந்த விரிசல்..!! ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

“இதுக்கு மேல உங்க கூட பேசுறதே வேஸ்ட்” பூர்ணிமா – மாயா உறவில் விழுந்த விரிசல்..!! ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள முதல் ப்ரோமோவில் மாயா மற்றும் பூர்ணிமாவின் வாக்குவாதங்கள் தான் இடம்பெற்றுள்ளன .

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் புரோமோவில் பிக் பாஸ் வீட்டில் அன்லிமிடெட் என்டர்டெயின்மென்ட் டாஸ்க் நடக்கிறது . அதில் ரவீனா மற்றும் மாயா இருவரும் சேர்ந்து நடனமாடுகின்றனர் .

இந்த இருவரின் நடனம் குறித்து கருத்து சொன்ன பூர்ணிமா மாயாவின் நடனம் குறித்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்தார் . இதனால் கடுப்பான மாயா பூர்ணிமாவிடம் வாக்குவாதம் செய்ய உங்கள்ட பேசுறதே வேஸ்ட் என சொல்லி அங்கிருந்து நகர்கிறார் அப்படியே அந்த ப்ரோமோவும் முடிகிறது.

கடந்த சில நாட்களாகவே பூர்ணிமா – மாயா இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய ப்ரோமோவிலும் இவர்களின் வாக்குவாதம் இவர்களின் உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் அதிகமாகி வருவதாக பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களும் பாருங்க…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top