Connect with us

3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட தொடங்கப்படவில்லை – அன்புமணி கேள்வி

Featured

3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட தொடங்கப்படவில்லை – அன்புமணி கேள்வி

திமுகஅரசு பொறுப்பேற்று 3 ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கோ, செயல்பாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை ஏற்படுத்துவதற்கோ எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் காஞ்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய அரசுமருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், தமிழகத்தில் திமுகஅரசு பொறுப்பேற்று 3 ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கோ

ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்துவதற்கோ எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.

கடந்த 40 ஆண்டுகளில் முழுமையாக நீடித்த எந்த ஆட்சியிலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்ததே இல்லை.

இத்தகைய சூழலில் ஐந்தாண்டுஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை என்ற அவப்பெயரை நடப்பு திமுக அரசு சுமக்கப் போகிறது.

எனவே, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே அதன் சொந்த நிதியில் தொடங்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காதலும் கலவரமும் கலந்த அர்ஜுன் தாஸின் ‘ரசவாதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Featured

To Top