Connect with us

சைரன் படத்துக்காக இதை செய்ய சொன்னார்கள் – நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த ஷாக்கிங் தகவல்

Cinema News

சைரன் படத்துக்காக இதை செய்ய சொன்னார்கள் – நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த ஷாக்கிங் தகவல்

ஜெயம்ரவி மற்றும் கீர்த்தி சுரேஷின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் சைரன் . பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்ட படங்களில் எழுத்துப் பணியில் பங்காற்றிய ஆண்டனி பாக்யராஜ், இயக்கியுள்ளார்.

டீசெண்டான பொருட்செலவில் தயாராகி உள்ள இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் உடன் சேர்ந்து பல இளம் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தை காண ரசிகர்கள் செம ஆவலாக உள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

ஆக்சன் காதல் செண்டிமெண்ட் என ஆரம்பம் முதல் இறுதி வரை தரமான காட்சிகளுடன் கோர்க்கபட்ட இப்படத்தின் ட்ரைலர் போலவே படமும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறித்து .

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் இன்று நடைபெற்ற நிலையில் படத்தின் சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பலர் பேசியுள்ளனர் .

அந்தவகையில் இந்த சந்திப்பில் கலந்துகொண்ட சுஜாதா விஜயகுமார் கூறியதாவது :

ஒரு ஆம்புலன்ஸ் சைரனுக்கும், போலீஸ் சைரனுக்கும் உள்ள போராட்டம் தான் படம். எப்போதும் வித்தியாசமான கேரக்டர்களில் அசத்தும் ஜெயம் ரவி இதிலும் அசத்தியுள்ளார். படம் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

கீர்த்தி சுரேஷுக்கு நடிப்பு வாழ்க்கையில் முக்கியமான படமாக இப்படம் இருக்கும். இந்த படத்திற்காக 5 கிலோ உடல் எடையை அதிகரித்து கீர்த்தி போலீஸாக நடித்துள்ளார்.

யோகி பாபு படம் முழுக்க வருகிறார்.அவர் நடிப்பைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தேன் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பேசிய கீர்த்தி சுரேஷ் சுஜாதா சொல்லியது போல் இந்த படத்திற்காக உடல் உடல் அதிகரித்து போலீசாக நடித்துள்ளேன் இந்த படம் அவருக்கும் பிடிக்கும் அனைவரும் திரையரங்குகளில் போய் படத்தை பாருங்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  களத்தில் அதிரடி காட்டப்போவது யார்..? ஹைதராபாத் மண்ணில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய முடிவு..!!

More in Cinema News

To Top