Connect with us

வெளுத்து வாங்கப்போகும் கனமழை – தென்கிழக்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!!

Featured

வெளுத்து வாங்கப்போகும் கனமழை – தென்கிழக்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!!

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது . இந்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் . இதனால் தமிழ்நாட்டில் இன்று மிக கன மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது .

அடுத்து வரும் 5 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என இந்திய வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால் பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, பெரம்பலூர். ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஈடன் கார்டனில் வாணவேடிக்கை நடத்திய கொல்கத்தா அணி - பஞ்சாப் அணிக்கு 262 ரன்கள் இலக்கு..!!

More in Featured

To Top