Connect with us

ஆத்தாடி ஆத்தா பேட்டிங்கில் வெளுத்துவாங்கிய ஹைதராபாத் அணி – மும்பை அணிக்கு 278 ரன்கள் இலக்கு..!!

Featured

ஆத்தாடி ஆத்தா பேட்டிங்கில் வெளுத்துவாங்கிய ஹைதராபாத் அணி – மும்பை அணிக்கு 278 ரன்கள் இலக்கு..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அபாரமாக விளையாடி 277 ரன்களை குவித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஹைதராபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் ஹைதராபாத் அணியும் – மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் – ட்ராவிஸ் ஹெட் இணை தொடக்கம் முதல் கெத்து காட்ட கூடவே அத்திரைடியான பாட்னர்ஷிப்பும் உருவானது .

ஆனால் தொடர்ந்து அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வால் 11 ரன்களில் அவுட்டானார் . அடுத்து வந்த அபிஷேக் சர்மா , ஹெட்டுடன் கைகோர்த்து அதிரடி பார்ட்னர்ஷிப்பை அமைத்தார் .

வந்த நொடி முதல் அதிரடியில் மிரட்டிய ஹெட் 24 பந்துகளில் 62 ரன்கள் குவித்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார் . மறுபக்கம் அதிரடி காட்டி வந்த அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 50 ரன்களை குவித்தார். ஆனால் அவரும் 63 ரன்களுடன் வெளியேறினார்.

அடுத்து வந்த எய்டன் மார்க்ரம் – ஹென்ரிச் கிளாசென் உடன் கூட்டணி அமைத்தார். ஒருபக்கம் ஹைதராபாத் பேட்டிங்கில் மிரட்ட மறுபக்கம் மும்பை திணறிக் கொண்டிருந்தது.

ஹென்ரிச் கிளாசென் கடந்த போட்டியில் எப்படி அதிரடியாக ஆடினாரோ இந்த போட்டியிலும் 34 பந்துகளில் 80 ரன்களை விளாசி ரசிகர்களையும் எதிரணியையும் மிரள வைத்தார் .

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் 277 ரன்களை குவித்தது.

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது . இதையடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி முதல் வெற்றியை பெற போகிறது எந்த அணி இரண்டாவது தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

See also  ஒவ்வரு அடியும் சரவெடி : சஞ்சுவின் அதிரடியால் வீழ்ந்தது லக்னோ..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top