Connect with us

கமல்ஹாசனின் தக் லைப் படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ – தரமான சம்பவம் இருக்கு மக்களே..!!

Cinema News

கமல்ஹாசனின் தக் லைப் படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ – தரமான சம்பவம் இருக்கு மக்களே..!!

மணிரத்தினம் – கமல்ஹாசன் காம்போவில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகிய நிலையில் தற்போது இந்த மாஸ் பட்ஜெட் படத்தில் மற்றொரு பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பல மெகா கூட்டணியில் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன் . அந்தவகையில் தற்போது தனது 234வது படத்திற்காக இயக்குநர் மணிரத்னம் உடன் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையிகள் தற்போது இப்படம் குறித்த அதிர்ச்சி தகவல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.

பிரம்மாண்ட பொருட் செலவில் மெகா கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்திலிருந்து நடிகர் துல்கர் சல்மான் கடந்த சில நாட்களுக்கு முன் விலகி இருந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவியும் இப்படத்தில் இருந்து வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

இந்நிலையில் இந்த படத்தில் இவர்கள் இருவரையும் ஈடு செய்யும் வகையில் நடிகர் சிம்பு இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கமல் தயாரிப்பில் சிம்பு STR48 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  SRH அணிக்கு கடின இலக்கை கொடுக்குமா RCB..? RCB டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!!!

More in Cinema News

To Top