Connect with us

அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இனி ரூ.1,000 நிதி உதவி – தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு

Featured

அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இனி ரூ.1,000 நிதி உதவி – தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ருபாய் 1000 நிதி உதவி வழங்குவதற்கான அரசாணை தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இனி ரூபாய் 1,000 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கும் இனி மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மட்டுமே மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் உயர்கல்வி உதவித்தொகை அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பால் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு கல்வி பயின்று வரும் மாணவிகள் தற்போது சிரமமின்றி அவர்களது கல்விக்கான சிறு சிறு செலவுகளை தீர்த்துக்கொள்ள இந்த தொகை உதவியாக இருக்கும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி இப்படி ஒரு அரசாணையை வெளியிட்ட தமிழக அரசுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கஞ்சாவின் தலைநகரமாக மாறிய தமிழகம் - அரசு மீது காட்டம் தெரிவித்த அண்ணாமலை..!!!

More in Featured

To Top