Connect with us

தேர்தல் தேதியே வந்தாச்சு ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போ..?

Cinema News

தேர்தல் தேதியே வந்தாச்சு ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போ..?

மக்களவை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் தேதியே வந்தாச்சு ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போ என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் கெட்டப் நாயகனாக வலம் வரும் நடிகர் சீயான் விக்ரமின் நடிப்பில் படு மிரட்டலாக உருவாகி உள்ள படம் தங்கலான்.

புரட்சி இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் சீயான் விக்ரமுடன் மாளவிகா மோகன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் கடந்த ஜனவரி மாதமே திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் முடியாத காரணத்தால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இப்படம் கடந்த மாதம் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் தேதியே வந்தாச்சு ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போ என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.

இதுநாள் நாள் வரை மவுனம் காத்து வரும் தங்கலான் படக்குழு படத்தின் எதாவது ஒரு அப்டேட் கொடுத்து ரசிகர்களின் ஆர்வ பசிக்கு தீனி போடுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top