Connect with us

“விராட் கோலி உடனான வாக்குவாதம் இதுதான்! விளக்கமளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்!”

IPL

“விராட் கோலி உடனான வாக்குவாதம் இதுதான்! விளக்கமளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்!”

கடந்த IPL சீசனில் விராட் கோலி உடனான வாக்குவாதம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கவுதம் கம்பீர் விளக்கம் கொடுத்துள்ளார். கடந்த சீசனில் ஆர்சிபி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. அப்போது இருவரும் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.

கிரிக்கெட் உலகில் இது விவாதப் பொருள் ஆனது. சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்தை தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் நடந்து ஏழு மாதங்கள் கடந்த நிலையில் அது குறித்து கம்பீர் விளக்கம் கொடுத்துள்ளார்.

“அந்த தருணத்தில் நான் ஒரு வழிகாட்டியாக செயல்பட்டிருந்தேன். எனது அணியின் வீரர்களை பாதுகாக்கும் விதமாக நான் செயல்பட்டேன். போட்டி நடைபெறும் நேரத்தில் நான் குறுக்கிடவில்லை. போட்டி முடிந்த பிறகும் வாக்குவாதம் தொடர்ந்தது.

அதனால் அணியின் ஆலோசகர் என்ற முறையில் எங்கள் வீரர்களுக்கு ஆதரவாக பேசினேன்” என கம்பீர் தெரிவித்துள்ளார். போட்டியின் போது கோலி மற்றும் நவீன்-உள்-ஹக் இடையே வாக்குவாதம் எழுந்தது. போட்டி முடிந்த பிறகு நவீனுக்கு ஆதரவாக கம்பீர் அதில் இணைந்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வியன்னா ஓபன் டென்னிஸில் அதிரடி! 🎾 லோரென்சோ முசெட்டி காலிறுதிக்குள் முன்னேற்றம் பெற்றார்!

More in IPL

To Top