Connect with us

DEFINITELY NOT : 2025 IPL-ல் தோனியை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!!

Featured

DEFINITELY NOT : 2025 IPL-ல் தோனியை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!!

2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி விளையாடுவாரா என அனைவரும் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தற்போது எம்.எஸ்.தோனியை சென்னன சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த தொடராக இருப்பது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தான் . 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் எப்போதும் பஞ்சம் இருக்காது .

அதிலும் குறிப்பாக இந்த ஐபிஎல் தொடரில் சென்னை , மும்பை , மற்றும் பெங்களூரு அணிகளுக்கு மற்ற அணிகளை விட வெறித்தனமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .

இந்நிலையில் கடைசியாக நடைபெற்ற தொடரில் சென்னை அணியில் இளம் வீரர் ருதுராஜை கேப்டன் ஆக்கிவிட்டு தோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்பட்டார் . அந்த தொடரில் என்னதான் சென்னை அணி சிறப்பாக விளையாடினாலும் இறுதிப்போட்டிக்கு செல்லமுடியவில்லை.

இதையடுத்து 2025 ஐபிஎல் தொடரில் தோனி இடம்பெறுவாரா இல்லை ஓய்வு பெறுவாரா என்ற கேள்வி அணைத்து கிரிக்கெட் ரசிகர்களின் மனத்தில் ஆழமாக எழுந்த நிலையில் தற்போது அனைவர்க்கும் மகிழ்ச்சி தரும் வகையில் சென்னை அணிய அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .

எம்.எஸ்.தோனியை Uncapped Player ஆக சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைத்துள்ளது.

சர்வதேச போட்டிகளில் விளையாடி 5 ஆண்டுகளை கடந்த இந்திய வீரர்களை uncapped ஆக தக்க வைக்கலாம் என்ற விதிப்படி, 4 கோடிக்கு தோனியை சிஎஸ்கே அணி தக்க வைத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கார் ரேஸில் கலக்கப்போகும் அஜித் - நடிகர் மாதவன் புகழாரம்..!!

More in Featured

To Top