Connect with us

2025 ஐபிஎல் ஏலம் குறித்து மனம் திறந்த இந்திய வீரர் தீபக் சஹார்..!!

Featured

2025 ஐபிஎல் ஏலம் குறித்து மனம் திறந்த இந்திய வீரர் தீபக் சஹார்..!!

2025 ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி அனைவரும் காத்திருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த தீபக் சஹார் ஐபிஎல் ஏலம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் தங்கள் அணியின் சில வீரர்களை விடுவித்து கொள்ளவும் சில வீரர்களை தக்கவைத்து கொள்ளவும் அனைத்து அணிகளுக்கும் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் 10 அணிகளும் தங்களால் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது .

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.தோனி , ருதுராஜ் , ஜடேஜா , துபே , பத்திரனா உள்ளிட்ட வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர் .

இந்நிலையில் CSK அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த தீபக் சஹார் 2025 ஐபிஎல் ஏலம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் சிஎஸ்கே நிர்வாகம் என்னை ஏலம் எடுப்பார்கள் என நம்புகிறேன். கடைசியாக நடைபெற்ற மெகா ஏலத்தில் என்னை அவர்கள் தக்க வைக்கவில்லை. ஆனால் எனக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு மீண்டும் சிஎஸ்கேவுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த வருடம் என்ன நடக்கபோகிறது என்பது தெரியவில்லை. ஆனால் என் திறமைக்கு இப்போது அதிக மதிப்பு கிடைக்கும் என எனக்கு தெரியும் என தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவின் பின்னணி: ஐஸ்வர்யாவின் உருக்கமான பேட்டி..

More in Featured

To Top