Connect with us

RCB-ல் இருந்து டெல்லி அணிக்குச் செல்லும் ஃபாஃப் டூபிளஸிஸ் உருக்கம்..!!

Featured

RCB-ல் இருந்து டெல்லி அணிக்குச் செல்லும் ஃபாஃப் டூபிளஸிஸ் உருக்கம்..!!

ஐபில் தொடரில் RCB அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஃபாஃப் டூபிளஸிஸ் 2025 ஐபில் மெகா ஏலத்தில் டெல்லி அணியில் ஏலத்தில் எடுத்துள்ள நிலையில் தற்போது ஐபில் தொடர் குறித்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.

2025 ஐபில் தொடருக்கான மெகா ஏலம் சவுதியில் நடைபெற்று வந்த நிலையில் இம்முறை இந்த மெகா ஏலத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடைபெற்றுள்ளன அதில் ஒன்றாக பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்து வந்த ஃபாஃப் டூபிளஸிஸ் டெல்லி அணி 2 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

இந்நிலையில் டெல்லி அணிக்கு செல்லும் ஃபாஃப் டூபிளஸிஸ் தற்போது ஐபில் குறித்தும் பெங்களூரு அணி குறித்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது :

சின்னச்சாமி மைதானத்தில் விளையாடியதுதான் எனது கிரிக்கெட் பயணத்திலேயே சிறந்த அனுபவம். நான் இப்படி இருப்பதற்கு இந்த மக்கள்தான் முக்கிய காரணம். ஒவ்வொரு முறையும் மைதானத்திற்குள் காலடி எடுத்து வைக்கும்போதும் ரசிகர்கள் மேஜிக்கை நிகழ்த்துவார்கள் என தனது ரசிகர்கள் குறித்து பெங்களூரு அணி குறித்தும் ஃபாஃப் டூபிளஸிஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ இந்த முறை ஐபில் தொடரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் இந்த தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ⚠️🔥 ஜனநாயகன் படத்திற்கு 60 கோடி இழப்பா? OTT உலகை அதிர வைத்த சர்ச்சை!

More in Featured

To Top