Connect with us

2025 ஐபிஎல் மெகா ஏலம் – வீரர்கள் பட்டியல் வெளியீடு..!!

Featured

2025 ஐபிஎல் மெகா ஏலம் – வீரர்கள் பட்டியல் வெளியீடு..!!

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தற்போது இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க போகும் வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நவம்பர் 24, 25 தேதிகளில் சவுதியின் ஜெட்டா நகரில் தொடங்க உள்ள நிலையில், ஏலத்தில் பங்கேற்க உள்ள வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த மெகா ஏலத்தில் 1,574 வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்த நிலையில் மொத்தம் 574 வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.

ஸ்டார் பிளேயர்கள் அடங்கிய முதல் செட்டில், ஸ்ரேயாஸ் ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங், கே.எல்.ராகுல் உட்பட 7 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சீனியர் வீரராக ஆண்டர்சனும் ஜூனியர் வீரராக வைபவ் சூர்யவன்ஷியும் (13) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி இந்த மெகா ஏலத்திற்கு இறுதி செய்த வீரர்கள் பட்டியலில், இங்கிலாந்து வீரர்களான ரூட், ஆர்ச்சர் ஆகியோரது பெயர்கள் இல்லை.

10 ஐபிஎல் அணிகளும் எந்த ஒரு இங்கிலாந்து வீரரையும் தக்க வைக்காத நிலையில், 37 வீரர்கள் இறுதி ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதில் ரூட், ஆர்ச்சர் ஆகியோரது பெயர்கள் இல்லாதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து: நாளை முடிவுக்கு வரும் வழக்கு!

More in Featured

To Top