Connect with us

ஐபிஎல் 2025 : பெரும் சிக்கலில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்..!!

Featured

ஐபிஎல் 2025 : பெரும் சிக்கலில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்..!!

2025 ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி அனைவரும் காத்திருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கி பிளேயர் என்று கருதப்படும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்க்கு புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது.

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் தங்கள் அணியின் சில வீரர்களை விடுவித்து கொள்ளவும் சில வீரர்களை தக்கவைத்து கொள்ளவும் அணைத்து அணிகளுக்கும் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்களின் பெயர்களை கடந்த சில நாட்களுக்கு முன் ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டன.

இந்நிலையில் எம்.எஸ்.தோனி , ருதுராஜ் , ஜடேஜா , துபே , பத்திரனா உள்ளிட்ட வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளது.

இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்காத நிலையில் அவருக்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.

2025 ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ளவில்லை என்றால் 2026, 2027 சீசன்களிலும் அவரால் பங்கேற்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் தங்களை பதிவு செய்யாத வீரர்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ள மினி ஏலங்களில் பங்கேற்க ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புஷ்பா 2: உலகம் முழுவதும் குவியும் பாக்ஸ் ஆஃபிஸ் எதிர்பார்ப்புகள்..

More in Featured

To Top