Connect with us

சுட்டிக்குழந்தை சாம் கரணை தட்டிதூக்கியது சிஎஸ்கே அணி..!!

Featured

சுட்டிக்குழந்தை சாம் கரணை தட்டிதூக்கியது சிஎஸ்கே அணி..!!

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் நேற்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம் கரணை 2.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் 24, 25 தேதிகளில் சவுதியின் ஜெட்டா நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது . இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க 577 வீரர்கள் தேர்வாகி உள்ளனர் .

இந்நிலையில் எந்த முறையும் இல்லாமல் இந்த முறை அனைத்து அணிகளிலும் பல மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு விளையாடி வந்த சாம் கரணை 2.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிஎஸ்கேவுக்கு திரும்பியுள்ள இங்கிலாந்து வீரர் சாம் கரண் இதுகுறித்து கூறிருப்பதாவது :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது மிகவும் மகிழ்ச்சி. சிஎஸ்கே வீரராக சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நான் விளையாடியதில்லை. ருத்து தலைமையின்கீழ் சென்னையில் விளையாட உற்சாகத்துடன் காத்திருக்கிறேன் என சாம் கரண் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top