Connect with us

பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனாவின் செயல் குறித்து ஜோடி சேர்ந்து புறம் பேசும் விஷ்ணு – நிக்சன் – நியூ ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனாவின் செயல் குறித்து ஜோடி சேர்ந்து புறம் பேசும் விஷ்ணு – நிக்சன் – நியூ ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள முதல் ப்ரோமோவே அர்ச்சனாவை பற்றி வந்துள்ளது.

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் புரோமோவில் பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனாவின் செயல் குறித்து கடந்த வார கேப்டனான விஷ்ணுவும் முன்னாள் கேப்டனான நிக்சனும் ஜோடி சேர்ந்து புறம் பேசி கொண்டிருப்பது போல் தெரிகிறது.

கமல் சார் சொல்லியும் அதே பிரச்சனையை தூக்கிக்கொண்டு என்னை கோவப்படுத்துகிறார் என்னை தப்பானவன் போல் அனைவரும் முன்னும் கேமெராக்கள் முன்னும் அர்ச்சனா ரெஜிஸ்டர் செய்கிறார் என விஷ்ணுவிடம் நிக்சன் புலம்ப அப்படியே ப்ரோமோ முடிகிறது.

நேற்று நடைபெற்ற நாமினேஷன் ப்ராசஸில் கூட அர்ச்சனா நிக்சனை நாமின்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களும் பாருங்க…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top