Connect with us

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று..!! என்னது இன்னைக்கும் மழை வருமா..?

Featured

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று..!! என்னது இன்னைக்கும் மழை வருமா..?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட்,3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய வீரர்களின் பெயர் பட்டியலை பிசிசிஐ சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தது .

இதில் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவருக்கும் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது .

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும் , ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாகவும் , டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கடந்த 10 ஆம் தேதி டர்பனில் நடைபெற இருந்த நிலையில் அந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.கெபேஹாவில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு இப்போட்டி நடைபெற உள்ளது.

ஏற்கனவே மழையின் காரணமாக முதல் போட்டி ரத்தான நிலையில் இன்று நடைபெறும் 2வது டி20 போட்டியிலும் மழை குறுக்கிடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் ரசிகர்கள் அனைவரும் வருண பகவானை வேண்டி வருகின்றனர்.

ஒருவேளை இன்று இந்த போட்டி மழை ஏதும் பெய்யாமல் சரியாக நடைபெற்றால் சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தும் இல்லையா என்பதை கமெண்டில் பகிருங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தலையின் பிறந்தநாள் கொண்டாட்டம் - விலையுயர்ந்த பைக்கை பிறந்தநாள் பரிசாக கொடுத்த ஷாலினிஅஜித்..!!

More in Featured

To Top